நான் பிறந்ததுமுதல்,
வளர்ந்து எழுந்ததுவரை..
என்னை நானே திரும்பிப்பார்க்கப்போகும்,
காலக்கண்ணாடி..
இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, அதனால்
இதை திரட்டிகள் திரட்ட அனுமதி இல்லை.
என்னை உணர்ந்தவர்க்கு மட்டும்,
தேவைப்பட்டால் கிட்டும்...
அதனால் அனுமதி இலவசம்!
என் குடும்பத்திற்க்கும் இதை
இப்போதே சொல்லும் உத்தேசமில்லை..
நான் ஓய்வுபெற்று சென்றபின்
உயிருடன் இருந்தால்...
என் மனைவுயுடன் நானும் சேர்ந்து
என் நினைவுகளை பகிர்ந்து கொள்ள
எழுதிவைக்ககப்போகும் குறிப்புகள் மட்டுமே.
அல்லது அதற்க்கு முன்
இந்த உலகில் விடைபெறவேண்டுமென்றால்..
நான் சாகும் தறுவாயில்
குடும்பத்திற்க்கு சொல்வேன்..
என் மறு பக்கத்தை
படித்துக்கொள்ளுங்கள் என்று!
ஒன்றுமே இல்லாத ஒரு புள்ளியில்
தொடங்கிய என் வாழ்க்கையின்
வட்டப்பாதையில் நான்
வலம் வந்த, வரும் இடங்கள் பற்றி..
நான் ‘நானே‘ என்று இறுமாந்து
பின்பு தடம்மாறி, கொஞ்சம் கூனாகி..
பின் 'நானாகி' வந்தகதை.
என்னுடன் பழகியவர்க்கு மட்டுமே
இதில் பதிவுகள் உள்ளன
எச்சரிக்கை!!! அத்தனையும்
அக்மார்க் சுயசொறிதல்கள் தான்!
இவை எனக்கு, எனக்காக மட்டும்
நான் ருசிக்கப்போகும்
என் அந்தகால நினைவுப் பழங்கஞ்சி!
வசந்தா நடேசன்.
thamizmaNam,இண்ட்லி எதுலயும் இணக்கலையா?
ReplyDeleteவருத்தப்பட வச்சுட்டீங்களே.. but i respect your view.
ReplyDelete